பொது செய்தி

தமிழ்நாடு

நிர்ணயித்த ஊதியம் வழங்குமாறு மாநகராட்சி கமிஷனரிடம் மனு

Added : டிச 09, 2020
Share
Advertisement
ஈரோடு: நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி, தினக்கூலி பணியாளர்கள், ஈரோடு மாநகராட்சி கமிஷனரிடம், நேற்று மனு கொடுத்தனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொது செயலாளர் மாணிக்கம் தலைமையிலான தொழிலாளர்கள், கமிஷனர் இளங்கோவனிடம் மனு கொடுத்து கூறியதாவது: மாநகராட்சியில், பொது சுகாதார பிரிவில், மேற்பார்வையாளர்கள், மலேரியா மஸ்தூர் (டி.ஹெச்.சி.,) பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,

ஈரோடு: நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி, தினக்கூலி பணியாளர்கள், ஈரோடு மாநகராட்சி கமிஷனரிடம், நேற்று மனு கொடுத்தனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொது செயலாளர் மாணிக்கம் தலைமையிலான தொழிலாளர்கள், கமிஷனர் இளங்கோவனிடம் மனு கொடுத்து கூறியதாவது: மாநகராட்சியில், பொது சுகாதார பிரிவில், மேற்பார்வையாளர்கள், மலேரியா மஸ்தூர் (டி.ஹெச்.சி.,) பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் என, 1,200 பேர் பணியாற்றுகின்றனர். சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றும் எங்களுக்கு, அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்காமல், தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 2019ல் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். 2021 ஜன., முதல் நிர்ணயித்த ஊதியமான, தூய்மை பணியாளர், மஸ்தூர் மலேரியா பணியாளர்மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு, 676 ரூபாய், ஓட்டுனர்களுக்கு, 714 ரூபாய் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி மனு கொடுத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X