பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் விற்பனையாளர், எடையாளர் பணி: நேர்முக தேர்வு வரும் 14ல் துவக்கம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
சேலம்: ரேஷன் விற்பனையாளர், எடையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு வரும், 14ல், துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில், கடந்த மார்ச் நிலவரப்படி, 132 விற்பனையாளர், 40 எடையாளர் பணியிடம் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், நேரடி நியமனத்துக்கு, கடந்த ஜூலை, 22 முதல், ஆக., 31 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சேலம்: ரேஷன் விற்பனையாளர், எடையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு வரும், 14ல், துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.


சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில், கடந்த மார்ச் நிலவரப்படி, 132 விற்பனையாளர், 40 எடையாளர் பணியிடம் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், நேரடி நியமனத்துக்கு, கடந்த ஜூலை, 22 முதல், ஆக., 31 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விற்பனையாளர் பணிக்கு, 9,247 பேர், எடையாளர் பணிக்கு, 1,523 பேர் என, 10 ஆயிரத்து, 770 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான, நேர்முகதேர்வு வரும், 14ல், நடக்கிறது. சேலம், கோட்டை, சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளியில், பிற்பகல், 2:00 மணிக்கு நேர்காணல் துவங்கி, 10 நாட்கள் நடக்கின்றன. தலா மூவர் அடங்கிய, 20 குழுவினர் நேர்காணல் நடத்துவர். முதல்நாளில், 100 பேர், அதை தொடர்ந்து காலை, 10:00 மணி முதல், தினமும், 1,000 பேர் வீதம் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். நேர்காணலுக்கு, அனைத்து கல்வி தகுதி சான்றுகளின் அசல் ஆவணங்கள், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். தேர்வானவர்களுக்கு, பணிநியமன ஆணை, வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X