ஓமலூர்: பட்டா நிலத்தில் மண் அள்ளிய, டிராக்டர் டிப்பர் லாரியை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். தாரமங்கலம் வட்டம், தௌவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில், பாப்பாத்திகாடு தோட்டத்தில், அனுமதியின்றி மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து தெசவிளக்கு வி.ஏ.ஓ.,சங்கர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, டிப்பர் லாரியில் மண் அள்ளியது தெரியவந்தது. அங்கு சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது, பொக்லைன் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, தாரமங்கலம் போலீசாரிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE