சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

Added : டிச 09, 2020
Share
Advertisement
தலைவாசல்: தலைவாசல் அருகே, கிணற்றில் விழுந்த பெண் சடலத்தை, நீர்மூழ்கி கேமரா உதவியுடன் மீட்கப்பட்டது. தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சாந்தி, 50. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 6ல், அங்குள்ள கிணற்றில் விழுந்தார். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சாந்தி உடலை தேடினர். கிணற்றில் நீர் அதிகளவு இருந்ததால், கடந்த இரண்டு நாட்களாக

தலைவாசல்: தலைவாசல் அருகே, கிணற்றில் விழுந்த பெண் சடலத்தை, நீர்மூழ்கி கேமரா உதவியுடன் மீட்கப்பட்டது. தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சாந்தி, 50. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 6ல், அங்குள்ள கிணற்றில் விழுந்தார். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சாந்தி உடலை தேடினர். கிணற்றில் நீர் அதிகளவு இருந்ததால், கடந்த இரண்டு நாட்களாக உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நீருக்குள் இருப்பதை பார்க்க பயன்படுத்தப்படும், நீர் மூழ்கி கேமரா நாமக்கல்லில் இருந்து நேற்று வரவழைக்கப்பட்டது. அதை பயன்படுத்தி, கிணற்றில் உடல் எங்குள்ளது என்பதை தீயணைப்பு போலீசார் கண்டறிந்தனர். பின்னர் மாலை, 5:00 மணியளவில் சாந்தியின் உடல் மீட்கப்பட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X