பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
பென்னாகரம்: ஒகேனக்கல், வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சாலையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பு இலாக்கா அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து அகற்றினர். ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

பென்னாகரம்: ஒகேனக்கல், வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சாலையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பு இலாக்கா அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து அகற்றினர். ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால், தொற்று நோய் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கையாக, வனப்பகுதியை ஒட்டிய சாலையோரம் உள்ள, பிளாஸ்டிக் கழிவுகளை சிறப்பு இலாக்கா அதிரடிப்படை ஆய்வாளர் பாலாஜி மற்றும் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சேகர் தலைமையிலான குழுவினர், அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X