பொது செய்தி

தமிழ்நாடு

அரூர் வாணியாற்றில் தண்ணீர்: விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

Added : டிச 09, 2020
Share
Advertisement
அரூர்: பல ஆண்டுகளுக்கு பின், அரூர் வாணியாற்றில் தண்ணீர் செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டுக்கு அருகே உற்பத்தியாகும் வாணியாறு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள வாணியாறு அணையை அடைகிறது. பின், 55 கி.மீ., தூரம் பயணித்து, தர்மபுரி மாவட்ட எல்லையான கைலாயபுரம்

அரூர்: பல ஆண்டுகளுக்கு பின், அரூர் வாணியாற்றில் தண்ணீர் செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டுக்கு அருகே உற்பத்தியாகும் வாணியாறு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள வாணியாறு அணையை அடைகிறது. பின், 55 கி.மீ., தூரம் பயணித்து, தர்மபுரி மாவட்ட எல்லையான கைலாயபுரம் வேடியப்பன் கோவில் பகுதியில் உள்ள, தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இந்நிலையில், தொடர்மழையால் கடந்த மாதம், 14ல், வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், முள்ளிக்காடு அணைக்கட்டு மற்றும் வெங்கடசமுத்திரம் ஏரி நிரம்பி, ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. மேலும், வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின், நேற்று அரூர் வாணியாற்றில், தண்ணீர் வந்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X