தர்மபுரி: தர்மபுரியில், அறிவியல் திறன்களை வளர்க்கும் 'ஸ்கோப்' என்னும் செயல்திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கும் போட்டிக்கு, பிளஸ், 1 மாணவர்களை தயார் படுத்த, 70 ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ், 1 மாணவர்களுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் ஆகி பாடங்களில், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் ஏற்படும் விதத்தில் அறிவியல் திறன்களை வளர்க்கும் வகையில் செயல்திட்ட அறிக்கை தயார் செய்யவும், 'ஸ்கோப்' திட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மாவட்ட அளவிலான செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி, மாணவர்களை தயார் படுத்த, ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். சி.இ.ஓ., கீதா பயிற்சியை துவக்கி வைத்தார். இதையடுத்து, கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், 70 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE