மெல்போர்ன்: 'நியூசிலாந்தில் மசூதிகளில் தாக்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாதி, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்' என, விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள, இரண்டு மசூதிகளில், கடந்தாண்டு, ஒருவர் தாக்குதல் நடத்தினார். சரமாரியாக சுட்டபடி சென்ற அவர், அதை சமூக வலைதளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பினார். இந்த தாக்குதலில், ஐந்து இந்தியர் உட்பட, 51 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலை நடத்திய, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டான் டாரண்ட், 30, மீதான வழக்கு நடந்து வருகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், 792 பக்கங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி படிப்பை முடித்த டாரண்ட், ஆஸ்திரேலியாவில் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தார். காயம் காரணமாக பணியைத் தொடர முடியவில்லை. வேலைக்கு செல்லாமல், குடும்பத்தாரிடம் இருந்து பணம் பெற்று சுற்றி வந்துள்ளார். கடந்த, 2013ல் இருந்து, 2017 வரை, பல நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
பயங்கரவாதம்
அதில் மிகவும் அதிக பட்சமாக, மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்தார். இதன்பின், நியூசிலாந்துக்கு குடியேறினார். மதவாதியாக மாறிய அவர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், இந்தியாவில் அவர் என்ன செய்தார், யாரை சந்தித்தார் என்ற விபரங்கள் தரப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE