பொது செய்தி

இந்தியா

'மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு
FarmersProtest, FarmLaw, Centre, Proposal, NoTalks, விவசாயிகள், போராட்டம், பேச்சுவார்த்தை

புதுடில்லி: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய அரசு 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து பேச்சுவார்த்தை 9-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news


இதற்கிடையே, விவசாய தலைவர்கள் மத்திய அரசுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நேற்று சந்திப்பு நடத்தினர்.

இது குறித்து, அனைத்திந்திய விவசாய சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் மொல்லா கூறியதாவது: விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடைபெறாது. விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று வழங்கப்படும் என எங்களிடம் மத்திய அமைச்சர் கூறினார்.

அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டில்லி மற்றும் ஹரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202020:45:54 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சரியான முடிவு தாத்தா போராடுறவங்க திசை திருப்பவே போராடுறாங்க
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-டிச-202019:54:05 IST Report Abuse
sankaseshan அருமை அருமையான விளக்கம்; முதலீடு இல்லாமல் விவஸ்யியை ஏமாற்றும் வேலை இனிநாடாக்கது மோடி அரசு வைத்தது ஆப்பு
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
09-டிச-202019:24:53 IST Report Abuse
Siva தமிழ் நாட்டில் ஒரு கோடி விவசாயிகள் தலைவிதியை 5000 புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள். அதை ஒழிக்க மோடி அரசு கொண்டு வந்தது தான் விவசாய சட்டம். அது தெரியாமல் பல அரசியல் புரோக்கர்கள் போராட்டம் என்று நடத்துவது மகா கேவலம். ஒரு விவசாயியின் விளைச்சல் மண்டியில் விற்கும் போது உழைத்து விளைவித்த பொருளுக்கு விவசாயிடமே 10 சதவீதம் கமிஷன் வாங்குவது துரோகம். அசிங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X