அந்த எட்டயபுரத்து சுப்பையா இங்க பிறந்தானா?

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரதி யார்? நாடகம் ஆன்லைனில் வருகிறதுமகா கவி பாரதியின் 138 வது பிறந்த நாள் டிசம்பர் 11 ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விவரிக்கும் பாரதி யார்? என்ற நாடகம் ஆன்லைனில் வருகிறது. இதுற்கான ஏற்பாடுகளை சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பு மற்றும் கலாகேந்திரா அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துவருகின்றனர். இதற்காக
latest tamil news


பாரதி யார்? நாடகம் ஆன்லைனில் வருகிறது

மகா கவி பாரதியின் 138 வது பிறந்த நாள் டிசம்பர் 11 ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விவரிக்கும் பாரதி யார்? என்ற நாடகம் ஆன்லைனில் வருகிறது.


latest tamil newsஇதுற்கான ஏற்பாடுகளை சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பு மற்றும் கலாகேந்திரா அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துவருகின்றனர்.

இதற்காக சமீபத்தில் மூன்று கேமிராக்களை வைத்து இந்த நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

மகாகவி பாரதியின் இளமைக்காலம்,அவரது கவித்திறன், சுதந்திரப் போராட்ட ஈடுபாடு, சிறைவாசம், பத்திரிக்கைப் பணி என அவரது வாழ்க்கையை விவரிக்கும் இந்த உணர்ச்சி பூர்வமான நாடகம் உள்நாடு வெளிநாடு என்று இதுவரை ஐம்பதிற்கும் அதிகமான மேடைகளைக் கண்டுள்ளது.


latest tamil newsஇந்த நாடகத்தில் பாரதியாகவே வாழ்ந்து இருப்பவர் இசைக்கவி ரமணன், இவருக்கு ஈடு கொடுத்து மனைவி செல்லம்மாளாக தர்மா ராமன் நடித்துள்ளார்.நாடகத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்சன் ராம்குமார் கணேசன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யாக நடித்துள்ளார். எஸ்.பி.கிரியேசன்ஸ் சார்பில் இந்த நாடகத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.எஸ்.ராமன் ,இசை அமைத்திருப்பவர் பரத்வாஜ் ராமன்.

பாரதியின் இளமைப் பருவத்தில் இருந்து மரணத்தை தழுவும் இறுதி நிலை வரை நாடகம் தொய்வின்றி செல்கிறது. கூலி விவசாயிகளைப் பற்றியும், ஏழ்மை நிலை குறித்தும், 'கணீர்' குரலில் பாரதி பேசுகிறார்.'பெண் விடுதலை' குறித்து. அன்னை நிவேதிதாவுடன், கருத்து பரிமாற்றம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.தமிழ் மீதான காதல், குழந்தைகள் மீதான அன்பு, சிறைப்படுத்தப்பட்ட தியாகிகளை கண்டு மனம் வெம்பி, ஆங்கிலேய அரசு மீது கொள்ளும் காட்டம் போன்றவற்றில், நிஜ பாரதி முளைத்து வந்தது போன்ற உணர்வு!'வந்தே மாதரம்' என்ற, வெள்ளையரால் தடை செய்யப்பட்ட கோஷத்தை, பாரதி முழங்கும்போது உணர்ச்சிவசப்படாமல் யாராலும் இருக்கமுடியாது.

நாடகத்தின் இறுதிக்காட்சியில், மரணப்படுக்கையில், பாரதி வீழ்ந்திருக்கிறார்.''கூடும் திரவியத்தின் குவைகள்திறல் கொள்ளும் கோடி வகைத் தொழில்கள்இவை நாடும் படிக்கு வினை செய்து -இந்த நாட்டோர் கீர்த்தி யெங்கும் ஓங்கக்கலி சாடும் திறன் எனக்குத் தருவாய்அடி தாயே! உனக்கு அரியது உண்டோ?''என்று பாடிக்கொண்டே வீழும்போதும் அவரது உடலை நெருப்பு தீண்டும் போதும் நம்மையறியாமல் கண்ணீர் வழிகிறது.

இந்த காட்சிகள் எல்லாம் கானொளி மூலமாக உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வந்து குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் தேசபக்தியை ஏற்படுத்தும் நாள் வருகின்ற 20 ந்தேதியாகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை
https://kalakendra.com/yourstruly margazhi/ என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
09-டிச-202017:46:22 IST Report Abuse
Saravanan AE நல்ல ஒரு முனைப்பு. அரசு ஆதரவு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X