அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: கட்சி துவங்குவது குறித்து, நடிகர் ரஜினி, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினார்.ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான தேதி குறித்து டிச.,31ல் அறிவிக்க உள்ளார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சென்னையில் உள்ள தனது
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: கட்சி துவங்குவது குறித்து, நடிகர் ரஜினி, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான தேதி குறித்து டிச.,31ல் அறிவிக்க உள்ளார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனமூர்த்தியுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். கட்சிப்பணிகள், பொதுக்கூட்டத்தை எங்கு துவக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.


ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பு

இதனிடையே, ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த பகுதியாக வரும் வாகனங்களை சோதனை செய்தனர். எஸ்ஐ தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



ரசிகர்களுக்கு அறிவுறை


ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், ரசிகர்கள், தமிழருவி மணியன், அர்ஜூனமூர்த்தி, சுதாகர் படங்களுடன் போஸ்டர் அடிக்க வேண்டாம். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் படங்கள் இடம்பெற்றால் மட்டும் போதும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
10-டிச-202019:07:59 IST Report Abuse
sankar எது எப்படியோ ரஜினிசார் வந்து கடவுள் மறுப்பு கூடட த்தை கரைந்து போக செய்து இல்லாம ஆக்கிநா சரி
Rate this:
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
10-டிச-202015:12:22 IST Report Abuse
Ramshanmugam Iyappan ரஜினி அவர்கள் நல்லவர், வல்லவர், அவர் பயணிக்கும் பாதையில் வெற்றியடைய வாஸ்த்துக்கள்.
Rate this:
Cancel
selvaraju.p - CHENNAI,இந்தியா
09-டிச-202023:23:57 IST Report Abuse
selvaraju.p ரஜனியின் தமிழக ரசிகர்கள் நன்றாக சிந்தியுங்கள். அவரை ஆதரித்து வரலாற்று பிழையை செய்து விடாதீர்கள். எங்கிருந்து வந்தார் இந்த அர்ஜுனமூர்த்தி . அவரின் பின்புலம் என்ன என்பதை சிந்தித்து செயல்படுங்கள் தமிழர்களே. நம்மில் ஒருவர் கர்நாடகாவிலோ அல்லது வேறு மாநிலத்திலோ எப்படி கட்சி ஆரம்பித்தால் அந்த மாநில மக்கள் ஆதரிப்பார்களா சிந்தித்து தசெயல்படுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X