வத்தலக்குண்டு : 'விராலிப்பட்டி கண்மாய்க்கு பெரியாறு பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாயக்கன்பட்டி வழியாக மதுரை மாவட்டம் கள்ளந்திரிக்கு வைகை, பெரியாறு பாசன சிமெண்ட் கால்வாய் செல்கிறது. இதில் பூவம்பட்டி அருகே உள்ள மடையிலிருந்து விராலிப்பட்டி சிறுநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடும் திட்டம் இருந்துள்ளது. அது செயல்பாட்டிற்கு வராததால் கால்வாய் துார்ந்து போய் உள்ளது.விராலிப்பட்டி பகுதி கிராமங்களில், மழை பற்றாக்குறையால் ஒரு போக விவசாயம் கானல் நீராக உள்ளது. சிறுநாயக்கன்குளத்திற்கு தண்ணீர் கிடைத்தால் விவசாயம் செழிக்கும்.
இதுகுறித்து விவசாயி சதீஷ்குமார் கூறுகையில், ''மதுரை,அணைப்பட்டி, வைகை அணை, பொதுப்பணித்துறை, மக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உள்ள மதகிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE