உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: 41வது இடத்தில் நிர்மலா சீதாராமன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: 41வது இடத்தில் நிர்மலா சீதாராமன்

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (20)
Share
புதுடில்லி: போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடம் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல்., சிஇஓ ரோஷினி நாடார் 55வது இடத்தில் உள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30
Forbes, FinanceMinister, NirmalaSitharaman, MostPowerfulWomen, RoshiniNadar, HCL, CEO, போர்பஸ், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், சக்திவாய்ந்த பெண், பட்டியல், ரோஷினி நாடார்,

புதுடில்லி: போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடம் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல்., சிஇஓ ரோஷினி நாடார் 55வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30 நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3வது இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளார்.


latest tamil newsநியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்.சி.எல்., சிஇஓ ரோஷினி நாடார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் 41வது இடத்தையும், ரோஷினி நாடார் 55வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X