கொரோனா நோயாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் அவர்களது வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர்
CoronaPatient, QuarentineNotice, SupremeCourt, SC, கொரோனா, நோயாளிகள், வீட்டில், நோட்டீஸ், சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் அவர்களது வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் கவனக்குறைவாக தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கு சில மாநில அரசுகள் தாங்களாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன,' என்றார்.

கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவதால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.


latest tamil news



இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது, 'கொரோனா நோயாளிகள் வீடுகளில் மாநில சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டுவது தேவையற்றது. ஒருவேளை கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குட்பட்டு உயரதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டும் நோட்டீஸ் ஒட்டலாம்,' என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-202007:53:21 IST Report Abuse
பேசும் தமிழன் நோட்டிஷ் ஒட்டுவது அவர்கள் குடும்பத்தை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல... அதை பார்த்து மற்றவர்கள் எ‌ச்ச‌ரி‌க்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே... அடுத்த வீட்டினர் சிறிது காலம் அவர்களிடம் சமூக இடைவெளியை கடை பிடிப்பார் என்பதற்காக தான்
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
10-டிச-202007:44:33 IST Report Abuse
MANIAN K மற்றவர்களின் பாதுகாப்பு???
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
10-டிச-202006:12:17 IST Report Abuse
 Muruga Vel கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரெண்டு மாசம் மது அருந்த ரஷிய அரசாங்கம் தடை ..மது அருந்துவதால் தடுப்பூசியின் தாக்கம் செயல் இழக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X