பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து துவங்கியதால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

Added : டிச 09, 2020
Share
Advertisement
கரூர்: வரத்து தொடங்கியுள்ளதால், சின்ன வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.வரத்து குறைவு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில வாரங்களாக, சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 100 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளது.

கரூர்: வரத்து தொடங்கியுள்ளதால், சின்ன வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.


வரத்து குறைவு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில வாரங்களாக, சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 100 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளது. இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து துவங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: மழை காரணமாக அறுவடை செய்த வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாது. முளைத்து விடும். அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உடனுக்குடன், மார்க்கெட்டுக்கு அதிகளவில் வருகிறது. இதனால், விலை குறைந்துள்ளது. தற்போது, ஒரு கிலோ முதல் தர சின்ன வெங்காயம், 60 முதல், 80 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 50 முதல், 60 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X