குளித்தலை: குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக ஆய்வு பணிக்கு, மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் வந்திருந்தார். தன் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு, குளித்தலை வக்கீல்கள் சங்க வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: வக்கீல் சங்கத்தின் மூலம் நீதிமன்ற கட்டடத்தில் லிப்ட், நூலகம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தேவை என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான உத்தரவு பெறப்பட்டவுடன் நடைபெறும். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தேவை என கோரிக்கை வைத்துள்ளீர்கள். விரைவில் தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் கிருஷ்ணராயபுரம், கடவூரில் கொண்டு வருவதற்கான நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE