பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: போக்குவரத்து துறை அமைச்சர் காட்டம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
கரூர்: ''ஊழலை பற்றி பேச, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து துறையில், கடந்த, 9.5 ஆண்டுகளாக மத்திய அரசின் பல விருதுகளை பெற்றுள்ளோம். இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாத, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யாரோ எழுதி கொடுத்த, துண்டு சீட்டை வைத்து கொண்டு பேசுவதை

கரூர்: ''ஊழலை பற்றி பேச, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து துறையில், கடந்த, 9.5 ஆண்டுகளாக மத்திய அரசின் பல விருதுகளை பெற்றுள்ளோம். இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாத, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யாரோ எழுதி கொடுத்த, துண்டு சீட்டை வைத்து கொண்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை வைத்து கொண்டு, ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஒளிரும் பட்டை உள்ளிட்ட, கருவிகளை, குறிப்பிட்ட நிறுவனத்திடம் தான், வாங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. மத்திய அரசு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்தான், போக்குவரத்து துறையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஜி.பி.எஸ்., கருவிகளை கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்ட பிறகு, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் (பள்ளி வாகனங்களை தவிர) பொருத்தி கொள்ளலாம் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். அதுவும் தற்போது நடைமுறையில் இல்லை. வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்த விண்ணப்பித்த, 15 நிறுவனங்களுக்கும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்த, 10 நிறுவனங்களுக்கும், ஒளிரும் பட்டைகள் பொருத்த, இரண்டு நிறுவனங்களும் விண்ணப்பித்தன. அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் சங்கத்தினர், தவறாக புரிந்து கொண்டு பேசுகின்றனர். அரசியலுக்காக வரும், 27ல் போராட்டம் அறிவித்துள்ளனர். புதிய வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள், வேக கட்டுப்பாடு கருவிகள் உள்ளன. அதை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் நிர்பந்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த, 23 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஊரடங்கு உத்தரவால் பல முறை தள்ளி போனது. கடந்த செப்டம்பர் மாதம், ஒப்பந்த புள்ளி பெறப்பட்டுள்ளது. ஆனால், 23 கோடியை, 900 கோடி ரூபாயாக மாற்றி விட்டாக, ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். அதை அவர் நிரூபிக்க தயாரா? மேலும், மேற்கூரை வழியாக தண்ணீர் ஒழுகும் பஸ் என, ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அந்த பஸ், 2012 ல் வாங்கப்பட்டது. அப்போது, அமைச்சராக இருந்தவர் (செந்தில் பாலாஜி) தற்போது, தி.மு.க., வில் இருக்கிறார். அவரிடம் ஸ்டாலின் சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும். கடந்த, 2016 முதல் வாங்கப்பட்டுள்ள புதிய பஸ்களில், தரமான ஷீட் போட்டு வெல்டிங் வைக்கப் படுகிறது. கண்ணாடிகளும் தரமானதாக போடப்படுகின்றன. கடந்த, 2006-11 ல் தி.மு.க., ஆட்சியில், ஐந்து போக்குவரத்து துறை செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X