பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை

Added : டிச 09, 2020
Share
Advertisement
ப.வேலூர்: பரமத்தி வட்டார, வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தென்னை பயிரில், கருந்தலைப்புழுக்கள் தாக்குதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, வேளாண் துறை மூலம் பரமத்தி தென்னை ஒட்டுண்ணி மையத்தில் தென்னை கருத்தலைப்புழுக்களை தாக்கி அளிக்கும் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.

ப.வேலூர்: பரமத்தி வட்டார, வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தென்னை பயிரில், கருந்தலைப்புழுக்கள் தாக்குதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, வேளாண் துறை மூலம் பரமத்தி தென்னை ஒட்டுண்ணி மையத்தில் தென்னை கருத்தலைப்புழுக்களை தாக்கி அளிக்கும் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது. மேலும், கருந்தலைப்புழுக்களின் அறிகுறிகளாக, இது அனைத்து வயதிலுள்ள தென்னை மரங்களையும் தாக்குகிறது. பின்னர் மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள, 34 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடுவதால் அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் காணப்படும். 'பிராக்கானிட்' என்ற குடும்பங்களை சேர்ந்த ஒட்டுண்ணிகள், 3,000 எண்கள்/ஹெக்டேர் என்ற அளவில் இலைகளின் அடிப்பாகத்தில் கட்டி விடுவதன் மூலம் கருத்தலைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். தற்போது, பரமத்தி தென்னை ஒட்டுண்ணி மையத்தின் மூலம், பிராக்கானிட் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X