பொது செய்தி

தமிழ்நாடு

விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பொங்கல் பண்டிகை முன்பதிவு சுறுசுறுப்பு

Added : டிச 09, 2020
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில், வழக்கமான ரயில்களின் இயக்கம் இல்லாததால், விரைவு போக்குவரத்து கழகத்தில் நேற்று முன்தினம் துவக்கப்பட்ட, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை, இன்னும் முழுமையாக துவக்கப்படவில்லை. முக்கிய நகரங்களுக்கு இடையே, குறைந்த அளவிலான, சிறப்பு ரயில்களே

சேலம்: தமிழகத்தில், வழக்கமான ரயில்களின் இயக்கம் இல்லாததால், விரைவு போக்குவரத்து கழகத்தில் நேற்று முன்தினம் துவக்கப்பட்ட, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.


கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை, இன்னும் முழுமையாக துவக்கப்படவில்லை. முக்கிய நகரங்களுக்கு இடையே, குறைந்த அளவிலான, சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பஸ்களில், 100 சதவீதம் பயணிகளை ஏற்றிக்கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில், முன்பதிவை நேற்று முன்தினம் துவக்கியது. வழக்கமான ரயில்களின் இயக்கம் துவக்காததால், பொங்கல் பண்டிகை முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே ஜன.,11 துவங்கி, 18 வரையிலான நாட்களுக்கு, 50 சதவீதம் வரை முன்பதிவு நடந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொங்கலை முன்னிட்டு, பஸ்களின் முன்பதிவு வழக்கத்தை விட சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ரயில்கள் இயக்கப்படாததும், பிரபல ஆம்னி பஸ் நிறுவனங்கள் அதன் இயக்கத்தை துவக்காததும், காரணம் என தெரிகிறது. விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்ததவுடன், சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவை துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X