சேலம்: சேலத்தில், திருட்டு கும்பலில் சிக்கிய இருவரை விடுவிப்பதாக கூறி, அதிகாரிகளின் பெயர்களில், வசூல் வேட்டையில் ஈடுபட்ட, காங்., நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புல்லட் திருட்டு வழக்கில், சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 21, அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 21, பனமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார், 21, கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டாம்பட்டியை சேர்ந்த கி ?ஷார், 21, அதே பகுதியை சேர்ந்த, பிரதீப் மகன் அபின், 19, சீனி மகன் ஆகாஷ், 19, ஆகியோரை கடந்த அக்.,6ல், சேலம் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில், அபின், ஆகாஷ் ஆகியோரை விடுவிக்கும் முயற்சியில் உறவினர்கள் இறங்கினர். இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த மாவட்ட, காங்., தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவின் தலைவர் சந்திரசேகர், 26, என்பவரை அணுகினர். இவர் மூலம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, வசந்தம் மொபைல் கடை நடத்தி வருபவரும், காங்., முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளருமான சரவணன், 43, ஆகியோர் சேர்ந்து, திருட்டு வழக்கில் சிக்கிய, அபின், ஆகாஷ் ஆகியோரின் தந்தையரான பிரதீப், 47, சீனி, 42, ஆகியோரிடம் பேசி, மாநகர போலீஸ் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால், இருவரையும் விடுவிப்பதாக தெரிவித்தனர். இதை நம்பி, சரவணனின் வங்கி கணக்கில், 2.50 லட்சம் ரூபாய், நேரில் இருவரும் சென்று, 3.50 லட்சம் ரூபாய் என மொத்தம், ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், இருவரையும் விடுவிக்கவில்லை. நேற்று முன்தினம் காலை, பிரதீப், சீனி ஆகியோர் நேரில் வந்து சரவணனிடம் பணம் கேட்ட போது, அவர் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பிரதீப், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஆடியோ ஆதாரங்களுடன் புகாளித்தார். அதன்படி, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி, காங்., நிர்வாகிகள் சரவணன், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்து, 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE