ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் ஏரியில், அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலம் ஆற்று தரைப்பாலம் மூழ்கியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான, காவேரிப்பாக்கம் ஏரிக்கு, பாலாற்றில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், 90 சதவீதம் அளவுக்கு, தண்ணீர் நிரம்பியதால், நேற்று முன்தினம் ஏரி திறக்கப்பட்டு, அங்கிருந்து வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலையில், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், வினாடிக்கு, 3,000 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பனப்பாக்கத்தில் இருந்து பெருவளையத்துக்கு செல்லும் வழியிலுள்ள, கொசஸ்தலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் நேற்று மூழ்கியது. அப்போது, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று, 30 பணியாட்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்தது. தரைப்பாலத்தில் திடீரென அதிகளவு தண்ணீர் வந்ததால், பஸ் பாதியில் நின்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கிய பஸ்சை தள்ளிச்சென்று மீட்டனர். தரைப்பாலம் மூழ்கியதால், பெருவளையம், சிறுவளையம், களப்பலம், காணாவூர், ஆளப்பாக்கம் உள்ளிட்ட, 30 கிராமங்களில் இருந்து பனப்பாக்கத்துக்கு செல்வோர், 20 கி.மீ., சுற்றி, ஓச்சேரி வழியாக செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE