பொது செய்தி

இந்தியா

இடுக்கி உள்ளாட்சி தேர்தலில் 74.49 % ஓட்டுப்பதிவு

Added : டிச 09, 2020
Share
Advertisement
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நேற்று நடந்தஉள்ளாட்சி தேர்தலில் 74.49சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.இடுக்கி மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல் முதன்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்தது. அதற்காக காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணி வரை நீடிக்கப்பட்டது.இரவு 7:00 மணி நிலவரப்படி 74.49 சதவீதம் ஓட்டுகள்
 இடுக்கி உள்ளாட்சி தேர்தலில் 74.49 %  ஓட்டுப்பதிவு

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நேற்று நடந்தஉள்ளாட்சி தேர்தலில் 74.49சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

இடுக்கி மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல் முதன்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்தது. அதற்காக காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணி வரை நீடிக்கப்பட்டது.இரவு 7:00 மணி நிலவரப்படி 74.49 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 1453 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு 2500 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.பதட்டமான 197 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.8718 ஊழியர்கள் மற்றும் 2119 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3213 வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கைடிச. 16ல் நடக்கிறது.
மந்தம்
மாவட்டத்தில் பிற பகுதிகளில்காலை முதல் ஓட்டு பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில்மூணாறு,தேவிகுளம் ஆகிய ஊராட்சிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் காலை 11:30 வரை மின்தடை ஏற்பட்டு ஓட்டுப்பதிவு சற்று மந்தகதியில் இருந்ததால் சில ஓட்டுச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
சிறப்பு ஏற்பாடு
நேற்று முன்தினம் மாலைக்கு பிறகு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் தனிமைபடுத்தப்பட்டவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்நேரடியாக ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி அடிமாலி,தொடுபுழா ஆகிய பகுதிகளில்பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஓட்டுபதிவு அதிகாரி ஆகியோர் பாதுகாப்பு கவசம்அணிந்து மாலை 5:00 மணிக்கு பிறகு ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பின் மின்னணு இயந்திரங்கள் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால் அடிமாலியில் ஒரு சில பகுதிகள் , இடமலைகுடிஆகிய பகுதிகளில் ரோடு மற்றும்போக்குவரத்து வசதி இல்லை என்பதால் 21 வார்டுகளின் ஓட்டுபதிவு இயந்திரங்கள் இன்று எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X