பொது செய்தி

இந்தியா

பள்ளி மாணவர்களின் புத்தகசுமை குறைகிறது; 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடமும் 'கட்'

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:* புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும்*
EducationMinistry, Suggests, WeighingSchoolBags, NoHomework, புத்தக பை கொள்கை, மத்திய அரசு, கல்வி அமைச்சகம், புத்தக சுமை, வீட்டுப்பாடம்

புதுடில்லி: 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும்
* ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன்மீது குறிப்பிடப்பட வேண்டும்
* பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்


latest tamil news




* பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும்
* மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்.
* இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது
* பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இவ்வாறு பள்ளி புத்தகப்பை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
09-டிச-202020:03:56 IST Report Abuse
S. Narayanan Children should do home work daily. This is followed for many years. Should not be discontinued.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
09-டிச-202016:17:44 IST Report Abuse
SaiBaba எங்கள் பள்ளிகளில் எல்லாம் கழிப்பறை இருந்ததில்லை.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
09-டிச-202016:16:18 IST Report Abuse
SaiBaba காலாண்டு தேர்வு ரத்து அரையாண்டு தேர்வு றது என்று செய்திகள் வருகின்றன. அனால் என் பிள்ளைகள் (2nd and 3rd std) காலாண்டு தேர்வு எழுதி விட்டார்கள். அரையாண்டு தேர்வும் நடந்து கொண்டு இருக்கிறதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X