புதுடில்லி: 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும்
* ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன்மீது குறிப்பிடப்பட வேண்டும்
* பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்

* பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும்
* மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்.
* இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது
* பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இவ்வாறு பள்ளி புத்தகப்பை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE