அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டத்தால் என்ன பாதிப்பு: முதல்வர் பழனிசாமி கேள்வி

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (28+ 10)
Share
Advertisement
திருவாரூர்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால் தான், மசோதாவை
வேளாண் சட்டம், விவசாயி, முதல்வர்பழனிசாமி, எட்டுவழிச்சாலை திட்டம், மத்திய அரசு, இடைத்தரகர்

திருவாரூர்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால் தான், மசோதாவை தமிழகம் வரவேற்கிறது. விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். விருப்பப்பட்டால் மட்டுமே, தமிழக விவசாயிகள் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம்.

இடைத்தரகர்கள் முறையை ஒழிப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபம் தரும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்கும். தமிழக விவசாயிகள் வேளாண் சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் விவசாயி என்பதால், வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறேன். தமிழக நலனை தவிர்த்து பிற மாநிலங்களை பற்றி சிந்திக்கக்கூடியவர் ஸ்டாலின்.


latest tamil news




விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலம் கையகபடுத்துவது மட்டுமே மாநில அரசின் பணி. இந்த திட்டம் நீண்ட கால திட்டம். இப்போது துவங்கினால் கூட முடிவடைய 6 ஆண்டுகள் ஆகும். வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு, தொழல் வளர்ச்சியடைய 8 வழிச்சாலை திட்டம் தேவை. திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வரப்பட்ட போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-டிச-202016:45:20 IST Report Abuse
Malick Raja இவர் ஒரு விவசாயி என்று சொல்வார் விவசாயம் செய்ததில்லை கல்லூரி முடித்து அரசியல் வாழ்வில் இருப்பவருக்கு எப்படி விவசாயம் தெரிந்திருக்க முடியும் ..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-202008:10:50 IST Report Abuse
RajanRajan முருவன் அண்ணா இந்த விவசாயி போராட்டம் இன்னா பாடம் சொல்லுது ? விவசாயி எண்ணிக்கையை விடவும் தரகர் கமிஷன் ஏஜெண்டுகள் எண்ணிக்கை பெருகி விட்டது அதாவது விவசாய உழைப்பு என்ற ஓன்று இல்லாமலே இந்த தரகு வேலை பார்த்தே விவசாயிகளை சுரண்டியே வாழலாம் எனும் நிலைப்பாடு. இதுக்கு ஒத்து ஊதுறது யாரு ? இந்தியாவிலே உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும். இது ஏன். ? எதிர்க்கட்சிகள் ஆட்சி அதிகாரம் லஞ்ச ஊழலுக்கு வழியில்லாம தவிக்கிறப்போ இந்த ஏஜெண்டுகளுக்கிட்டே துட்டு பிரிச்சு கட்சியை பணயம் வச்சு தலைகள் எல்லாம் குளிர்காய்கிறானுங்க. எப்படி இந்த தெரு கூத்து பாருங்கள் மக்களே. இவனுங்களா நாட்டை முன்னேற்ற போவுறானுங்க. பொழைப்பத்த கூத்தாடிகள் கூட்டம்.
Rate this:
Cancel
09-டிச-202022:38:17 IST Report Abuse
ஆப்பு சேலம் டு சென்னை எட்டுவழிச்சாலையை இடைப்பாடி வரை நீட்டி இடைப்பாடியாரின் பரம்பரை நிலங்களை கையகப் படுத்தி பெரிய பஸ் ஸ்டாண்டு அங்கே கட்டினா தெரியும். என்ன பிரச்சனைன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X