புதுடில்லி: 2020-ம் ஆண்டு டுவிட்டரில் மக்களால் அதிகம் டுவீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பைடன் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடி 7ம் இடத்தை பிடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் டுவிட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட (டுவீட் செய்யப்பட்ட) நபர்கள் குறித்த பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்திய பிரதமர் மோடி 7ம் இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். இவர் 10வது இடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 5வது இடத்திலும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் 9வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் புளாய்டின் கொலை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளதால் அவரின் பெயர் 3வது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் 2020ல் நடந்த தேர்தல்கள் குறித்து மட்டுமே 70 கோடி டுவீட்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE