புதுடில்லி: பொது இடங்களில் 'வைபை' வசதி ஏற்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: நாடு முழுவதும், பெரிய ‛வைபை' நெட்வொர்க் ஏற்படுத்த பிஎம் - வைபை அக்சஸ் நெட்வோர்க்( PM-Wi-fi Access Network) துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக நாடு முழுதும் பொது தகவல் மையங்கள் அமைக்கப்படும். இதற்காக எந்த கட்டணமும், பதிவும் செய்ய தேவையில்லை. கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு கடலுக்கடியில் ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் இணைப்பு ஏற்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிதியாண்டில் ஆத்ம நிர்பார் பாரத் யோஜனா திட்டத்திற்கு ரூ.1,584 கோடி நிதி ஒதுக்கவும், 2020-23ம் நிதியாண்டில் ரூ.22,810 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திலும், அசாமில் இரண்டு மாவட்டங்களிலும் மொபைல் சேவையை ஏற்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE