பொது செய்தி

இந்தியா

சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.கொரோனா பிரச்னையால் மந்தமாக இருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ்
Sensex, Nifty, BSE, NSE, Sharemarket,

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.

கொரோனா பிரச்னையால் மந்தமாக இருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300, தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 78 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,103.50 எனும் புதிய உச்சத்தை தொட்டது. இதேப்போன்று நிப்டி 136.15 புள்ளிகள் உயர்ந்து 13,529.10 புள்ளிகளை தொட்டது.


latest tamil news




கொரோனாவுக்கான தடுப்பு மருந்தில் உலகில் பல நாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக உலகளவில் பங்குச்சந்தைகள் முன்னேற்றம் கண்டன. இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்தன. மேலும் ரூபாயின் மதிப்பு உயர்வு, இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததோடு, புதிய உச்சத்தையும் தொட்டன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
10-டிச-202013:13:23 IST Report Abuse
Balaji பொதுவாகப்பார்த்தால் சாமானியனுக்கு இந்த GDP , ஸ்டாக் மார்க்கெட் போன்ற பொருளாதாரத்துக்கு எந்த சம்பந்தமும் இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை. அதுவே உண்மை.. சாமானிய இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு கிடைப்பதை வைத்து காலம் ஓட்டுகின்றான். அதற்க்கு முக்கிய காரணி நமது கலாச்சாரம். எல்லாம் அவன் செயல் என்று இருக்கும் பங்கு. இதுவும் ஒருவிதத்தில் நல்லதே...
Rate this:
Cancel
10-டிச-202006:46:37 IST Report Abuse
ஆப்பு சும்மாவா 20 லட்சம் கோடி ரூவா இருக்கே... சுமார் 250 பில்லியன் டாலர்கள். இப்போ கொஞ்சம் பணம் போட்டு முதலீடு செய்தால் அடுத்த ஆறு மாசத்தில் அறுவடை செஞ்சுரலாம். இதுதான் ஷேர் மார்க்கெட் ஃபார்முலா.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
10-டிச-202013:49:31 IST Report Abuse
Balajiஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் கோடி இல்லயா ஷாமி?...
Rate this:
Cancel
10-டிச-202006:09:12 IST Report Abuse
ஆப்பு இதுக்கெல்லாம் நேரு காரணமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X