பொது செய்தி

இந்தியா

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, எழுத்துப்பூர்வமாக அளித்த பரிந்துரைகளை நிராகரித்த விவசாய சங்கங்கள், போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளன. இதனிடையே, மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசினர்.மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி - ஹரியானா சாலையில் பஞ்சாப் மாநில
FarmLaws, farmerleaders, விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசு, விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டம்,

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, எழுத்துப்பூர்வமாக அளித்த பரிந்துரைகளை நிராகரித்த விவசாய சங்கங்கள், போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளன. இதனிடையே, மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசினர்.

மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி - ஹரியானா சாலையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு(டிச.,08), விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகள் தொடர்பாக சட்டத்தில் திருத்தவும், அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் சட்டத்தில் செய்ய உள்ள திருத்தங்கள் குறித்து, எழுத்துப்பூர்வமான அறிக்கையை விவசாய சங்கங்களிடம் இன்று அளிக்கப்பட்டது.


latest tamil news



இதனை பரிசீலனை செய்த விவசாய சங்கங்கள் அதனை நிராகரித்து விட்டன. பழைய மசோதாவை திருத்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். பழைய சட்டத்தை, புதிதாக மாற்றி கொடுத்ததாக தெரிவித்துள்ள சங்க நிர்வாகிகள், வரும் 12ம் தேதி டில்லி - ஜெய்ப்பூர், டில்லி ஆக்ரா நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப்படும்.14ம் தேதி பா.ஜ., அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ள அவர்கள், நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் விவசாயிகள், டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கும்படி கூறியுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Siresh - Chennai,இந்தியா
09-டிச-202023:25:09 IST Report Abuse
P. Siresh மீடியாக்கள் எல்லாம். எதிர்ப்பு மட்டும் T.V.la காட்டிட்டு இருக்காங்க. அத்னால் மத்திய அரசுதான் விவசாயிகளை வஞ்சிகர. மாறி காற்றங்க. ரோட்ல.சமசி.சாப்பிட்ட.மாறி காட்டவா ஐயோ பாவம் அங்கரங்க.ஆனால் லவாங்க எல்லாம்.நல்ல.சட்டத.சுய லபதுகு.எதிர்கரங்க.என்பது அரசு.விவரமாக மக்களிடம் எடுத்துச்.செல்ல வேண்டும்.அத்வும்.இவர்கள்.எல்லோரும் எதிர் கட்சி ஆளும் மாநிலத்தவர்கள் .தேவை இல்லாமல் செய்கிறார்கள் என்பதை மீடியாக்கள் மூலம் மக்களுக்கு.எடுத்து சொல்ல.வேண்டும்
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
09-டிச-202021:28:32 IST Report Abuse
N.K சட்டத்தில் விளைபொருட்களை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் சந்தைப்படுத்திக்கொள்ளலாம் என்று இருப்பதால் புதிய சட்டங்களை ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று விட்டுவிட முடியவில்லை. இந்த சட்டத்தை ஏற்காத மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தினால் என்ன?.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
09-டிச-202021:28:19 IST Report Abuse
கொக்கி குமாரு விவசாயி, விவசாயின்னு சொல்லுறாங்க, இதுவரையில் பஞ்சாப் விவசாயிகளை மட்டும் போராட்டத்தில்,கலவரத்தில், போட்டோக்களில் பார்க்க முடிகிறது. இந்தியாவின் வேறு மாநில மக்கள் விவசாயமே செய்வதில்லையோ? பஞ்சாப்பில் ஒரு சமூகமே இடை தரகர்களாக இருந்துகொண்டு விவசாயிகளின் பணத்தை கொள்ளை அடிப்பதாக ஒரு பேச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X