பொது செய்தி

இந்தியா

சீனாவுடனான உறவு பழைய பாதைக்கு திரும்புவது கடினம் :அமைச்சர் ஜெய்சங்கர்

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புது டில்லி: சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது பெரும் பிரச்னையாக இருக்கிறது எனவும், ஒப்பந்தங்களை சீனா மதிப்பதில்லை எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு நிறுவனம் லோவி. இந்நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் வெளியுறவு அமைச்சர்

புது டில்லி: சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது பெரும் பிரச்னையாக இருக்கிறது எனவும், ஒப்பந்தங்களை சீனா மதிப்பதில்லை எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.



latest tamil news




ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு நிறுவனம் லோவி. இந்நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று உரையாடினார். இந்தியா - சீனா எல்லை பிரச்னை ஏற்பட்டு 8 மாதங்களாகியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் அடிப்படை பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டன என கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவுடனான நமது உறவு மிகக் மோசமான கட்டத்தில் உள்ளது. ஒப்பந்தங்களை மீறி லடாக் எல்லைக்கு ஆயிரக்கணக்கான வீரர்களைக் முழு தயாரிப்புடன் சீனா கொண்டு வந்தது.

இதுவே இரு தரப்பு உறவை மோசமாக பாதிக்க காரணம். இரு படையினரும் நெருக்கமாக இருந்ததால் மோதல் ஏற்பட்டது. தற்போது இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனாலும் உறவை பழைய பாதைக்கு திருப்புவது மிகப் பெரிய பிரச்சினை.


latest tamil news



சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசினேன். மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்தேன். பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் தூதர்கள் இடையே சந்திப்புகளும், பேச்சுவார்தைகளும் நடந்தன. ஆனாலும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை அவர்கள் மதிப்பதில்லை. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
10-டிச-202012:10:26 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy இதுவரை இந்தியா சீனாவை நம்பிக்கொண்டிருந்தது.மோடியும் கூட.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
10-டிச-202013:16:47 IST Report Abuse
Balajiமோடி நம்பியதாக தெரியவில்லை. நம்பி இருந்தால் இந்தளவிற்கு நாம் தயார் நிலையில் இருந்து சீனாவிற்கு செக் வைத்திருக்க முடியாது...மோடி செய்தது ஒருவகை அரசியல்....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-டிச-202009:45:40 IST Report Abuse
Sivagiri காங்கிரஸ் அதன் முதலாளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை - இதை அதன் பங்காளிகளான திமுக-மம்தா-உணரும்வரை
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
10-டிச-202009:30:46 IST Report Abuse
Amirthalingam Shanmugam எல்லாம் பட்டுதான் தெரிய வேண்டியிருக்கிறது.ஒரு இரண்டு வருடம் எல்லா அமைச்சர்களும் இஸ்ரேலில் பயிற்சி எடுத்தால் சரியாகப்போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X