புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அட்மிட்

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்.கம்யூ.கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா , 2000 முதல், 2011 வரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 76. கோல்கட்டாவில் வசித்து வரும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால்,
Former Bengal CM Buddhadeb Bhattacharya hospitalised, Mamata Banerjee wishes speedy recovery

கோல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்.கம்யூ.கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா , 2000 முதல், 2011 வரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 76. கோல்கட்டாவில் வசித்து வரும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news




அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் நல்ல நிலையில் இருந்தாலும், அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திலேயே தொடர்கிறது.

இதையடுத்து, சிறப்பு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
'புத்ததேவ் விரைவில் நலம் பெற வேண்டும்' என, கவர்னர் ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-டிச-202021:57:02 IST Report Abuse
Ramesh Sargam சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X