கோல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்.கம்யூ.கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா , 2000 முதல், 2011 வரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 76. கோல்கட்டாவில் வசித்து வரும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
![]()
|
அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் நல்ல நிலையில் இருந்தாலும், அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திலேயே தொடர்கிறது.
இதையடுத்து, சிறப்பு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
'புத்ததேவ் விரைவில் நலம் பெற வேண்டும்' என, கவர்னர் ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE