சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொரோனா இருக்கா, இல்லையா?'

Added : டிச 09, 2020
Share
Advertisement
கொரோனா இருக்கா, இல்லையா?'அ.தி.மு.க., சார்பில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியின் தேர்தல் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.அக்கட்சியைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்டோர், மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, 1,000 பேர் கூட, உட்கார முடியாத
பக்க வாத்தியம்


கொரோனா இருக்கா, இல்லையா?'



அ.தி.மு.க., சார்பில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியின் தேர்தல் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.
அக்கட்சியைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்டோர், மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, 1,000 பேர் கூட, உட்கார முடியாத நிலையில், கூட்டம் நெருக்கியடித்து நின்றது. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் இருந்தனர்.அங்கிருந்த இளம் நிருபர், 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... கொரோனான்னு ஒரு நோய் இருக்கா, இல்லையா...' எனக் கேட்டார். அருகிலிருந்த மூத்த நிருபர், 'தேர்தல் வந்துருச்சு... கொரோனாவை விட, பெரிய வைரஸ் எல்லாம், வீட்டுக்கு வரும் பாருங்க...' என்றதும், இருவரும் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X