சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மாற்றத்தை வரவேற்போம்!

Added : டிச 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாற்றத்தை வரவேற்போம்!ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாழ்க்கை என்பது, நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை; அது எதிர்பாராமல் நடப்பவை.நடிகர் ரஜினி, அரசியலுக்கு வந்ததும் அப்படித் தான். இது இறைவனால், ஏற்கனவே எழுதப்பட்டது.முதலில் களமிறங்குவோம். வெற்றியோ, தோல்வியோ அது வரும் போது, பார்த்துக்

இது உங்கள் இடம்


மாற்றத்தை வரவேற்போம்!ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாழ்க்கை என்பது, நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை; அது எதிர்பாராமல் நடப்பவை.நடிகர் ரஜினி, அரசியலுக்கு வந்ததும் அப்படித் தான். இது இறைவனால், ஏற்கனவே எழுதப்பட்டது.முதலில் களமிறங்குவோம். வெற்றியோ, தோல்வியோ அது வரும் போது, பார்த்துக் கொள்ளலாம்.எதிர்மறை சிந்தனை உடையோரை, அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. அவர்களின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. நேர்மையான, ஆன்மிக அரசியலை, நாம்முன்னெடுத்துச் செல்வோம்.நம் நாட்டின் பிரச்னையை தீர்க்க, மனம் பதற்றமில்லாத, பதவி ஆசை இல்லாத மனம் தான் வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் உடைய ரஜினிக்கு, அது இருக்கிறது.தற்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட, ரஜினியின் பேச்சு சிறப்பாக இருக்கிறது. யார் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை; மக்களை துாண்டி, போராட்டக் களத்தில் இறக்கிவிட விரும்பவில்லை.பணமும், புகழும் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது; அதனால், அதற்காக ஆசைப்பட மாட்டார்.இந்நேரத்தில், தன் உடல் நலத்திலும் ரஜினி கவனம் செலுத்த வேண்டும்.

அவர் ஏற்படுத்த விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு, தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும்.


இலவச ஜி.பி.எஸ்., கருவிகிடைக்குமா?ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: படகோட்டி படத்தில் இடம்பெற்ற, 'தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்...' என்ற பாடல், மீனவரின் நிலையை எடுத்துரைக்கும்.மீனவரின் வாழ்க்கை தினமும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. ஒருபுறம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்; மறுபுறம் எல்லை தாண்டியதால், இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உயிரிழக்கின்றனர்.'எல்லை தாண்டி, ஏன் மீன் பிடிக்க செல்கின்றனர்?' என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நிலத்தில், அடையாள போர்டு இருப்பதுபோல, கடலில் ஏதும் இருப்பதில்லை; அதனால், எது எல்லை என்பதை, கண்டறிய முடியாது.இருப்பிடத்தை காட்டும், ஜி.பி.எஸ்., கருவியால் மட்டுமே, மீனவர் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அனைத்து மீனவராலும், ஜி.பி.எஸ்., கருவி வாங்க முடியாது. காரணம், தரமான கருவி வாங்க, 50 ஆயிரம் ரூபாய் வேண்டும்.மீனவர் யாரும் வேண்டுமென்றே எல்லை தாண்டுவதில்லை.

ஏனென்றால், இலங்கை கடற்படையின் துப்பாக்கி தோட்டாக்கள் பாயும் என்பது, அவர்களுக்கு தெரியும். எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக, இதுவரை எத்தனையோ பேரை இழந்துள்ளனர்.ஐந்து ஆண்டுகளில், இலங்கைக் கடற்படையினர், 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றினர். மத்திய - மாநில அரசுகளின் முயற்சியால், பல படகுகள் விடுவிக்கப்பட்டன.தற்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, பராமரிப்பின்றி சேதமடைந்த, 121 படகுகளை அழிக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசு, இப்பிரச்னையை தீர்க்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இயற்கை சீற்றத்தின் போது, படகுகள் சேதமடைவது தொடர்கிறது. இதை தடுக்க, தமிழக கடற்கரை பகுதியில், பாதுகாப்புக் கூடம் அமைத்து தர வேண்டும்.

மீனவருக்கு, ஜி.பி.எஸ்., கருவியை இலவசமாக வழங்கினால், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதை தடுக்கலாம்.


அனுமதி அளித்தது ஏன்?எஸ்.ராஜகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பா.ஜ., தலைவர் முருகனும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும், 'கொரோனா' நோய் தொற்றை, தமிழகம் முழுக்க பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என, பொதுமக்களை கட்டாயப்படுத்தும், அபராதம் விதிக்கும் தமிழக அரசு, இந்த அரசியல்வாதிகளிடம் மட்டும் பம்முவது ஏன்?அந்த அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டங்களில், சமூக இடைவெளி இருப்பதில்லை; பலர், முக கவசம் அணிவதில்லை; கும்பலாக கூடி, கோஷமிடுகின்றனர்.இதனால், கொரோனா நோய் பரவும் தானே... ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.சாதாரண மக்கள், அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம், நோய்க்கு தெரியாது. தமிழக அரசுக்கு உண்மையிலேயே, மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால், இந்த பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருக்காது.தமிழகத்தில், கொரோனா தொற்று மீண்டும் அதிகமானால், அதற்கு காரணம், அந்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அவர்களின் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்த, மாநில அரசும் தான்!


கல்வியாளர்களே மவுனம் ஏன்?கோபால் மாரிமுத்து, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான புகாரை விசாரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, வேதனை அளிக்கிறது.தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், சுரப்பாவிற்கு எதிராக செயலில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன.சில ஆண்டுகளுக்கு முன், பல்கலை துணைவேந்தர் பதவி ஏலத்திற்கு விடப்படுகின்றன என, புகார் எழுந்தது. தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித், பொறுப்பேற்ற பின், அந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கு, சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு, துணைவேந்தர் சுரப்பா முயற்சி செய்வது தவறா? மத்திய அரசின் மானியம், சிறந்த ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்டு, சுரப்பா குறிவைக்கப்படுகிறார்.சுரப்பா மகள், அண்ணா பல்கலையில் முக்கிய பணியில் இருப்பதாகவும், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மகளுக்கு அந்த பணியை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.ஆனால், 'என் மகள், சம்பளம் பெறாமல், பல்கலையில் சிறப்பு பணியாளராகத் தான் சேவையாற்றி வருகிறார்' என, சுரப்பா தெளிவாக கூறியுள்ளார்.ஒருவர் சம்பளம் வாங்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன், கல்வி சேவை செய்கிறபோது, 'முறைகேடு' என்ற கேள்வி எங்கே எழுகிறது?இந்த அரசியல்வாதிகளால் நேர்மையாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர்; அதை நாம், கண்டும் காணாமலும் இருக்கிறோம்.இவ்விஷயத்தில் கல்வி யாளர், சமூக ஆர்வலர்கள் ஏன், மவுனம் சாதிக்கின்றனர் என்பதும் புரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-202008:11:37 IST Report Abuse
மோகனசுந்தரம் ரஜனி அவர்கள் ஒவ்வொரு முறையும் ஜகா வாங்கும் போது அவரை கண்டபடி திட்டி கருத்து எழுதியவன் நான். ஆனால் இன்று அவர் கட்சி தொடங்குவேன் என்று கூறியது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் அவர் நலனையும் காத்து கொள்ள வேண்டும். எப்படியானாலும் இரண்டு திருட்டு திராவிட கட்சிகளை ஒழித்தால் போதும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-டிச-202006:29:58 IST Report Abuse
D.Ambujavalli அன்று கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்த கமலோ . ரஜினியோ, பலகாலம் முன்பே சிவாஜி முதல், டீ ஆர், எத்தனையோ பேர் வருகிறார்கள். ஆனால் கமல் ரஜினிக்கு மட்டும் இத்தனை விமர்சனங்கள் எதற்கு? கட்சியில் ஊழல், உட் கட்சிப் பகை, யார் எங்கு பிய்த்துக்கொண்டு ஓடுவார்களோ என்ற பதற்றம்தான் இவ்வளவு அலட்டிக்கொள்ள வைக்கிறது இவர்களை இதே இதழில் அதிமுக கூட்டத்தில் இரண்டாயிரம் பேர் முக கவசம் , இடைவெளியை மீறி உள்ள செய்தியை கூட அரசு கேள்வி கேட்குமா? அதுதான் மற்ற கட்சிகளையும் கேட்க வாய் இல்லாத நிலையின் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X