சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 09, 2020
Share
Advertisement
'அப்போ ஏன், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்களை, தி.மு.க., இன்னும் எதிர்க்கிறது...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேச்சு:கொரோனாவால் தொழில் கேள்விக்குறியான நிலையில், தொழிலாளர் வாழ்வாதாரம் பற்றி தற்போதைய அரசு சிந்திக்கவில்லை. தி.மு.க., எப்போதும், 'இண்டஸ்ட்ரியல் பிரண்ட்லி'யாகவே இருந்துள்ளது.

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்போ ஏன், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்களை, தி.மு.க., இன்னும் எதிர்க்கிறது...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேச்சு:கொரோனாவால் தொழில் கேள்விக்குறியான நிலையில், தொழிலாளர் வாழ்வாதாரம் பற்றி தற்போதைய அரசு சிந்திக்கவில்லை. தி.மு.க., எப்போதும், 'இண்டஸ்ட்ரியல் பிரண்ட்லி'யாகவே இருந்துள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.


'பா.ஜ.,வைப் பார்த்தால், புயலே பதுங்குகிறதா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள நடிகை குஷ்பு:
தமிழகத்தை நோக்கி, இரு புயல்கள் வந்தன. அவ்விரு புயல்களும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற நம்பிக்கையை கொடுத்தது, பா.ஜ.,வின் வேல் யாத்திரை.

'அரசியலில் அருகதைக்கு எல்லாம் வாய்ப்பில்லை என்ற நிலையே உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
நாகரிக அரசியலுக்கும், தி.மு.க.,விற்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அக்கட்சியின் துணை பொதுச் செயலர் ராசாவும், ஜெயலலிதாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?



'மத்திய அரசு ஒழிய வேண்டும்; ஆனால், ஸ்காலர்ஷிப் மட்டும், மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்றால், எப்படி சார்...' என, கிடுக்கி போடத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு:
எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை மத்திய அரசு கைவிடுகிறது. மாநில அரசு நிதியிலிருந்து அந்த மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்க வேண்டும்.


'சமூக வலைதளங்களை நடத்தும் நிறுவனங்கள், இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்தாலே, துவேஷங்கள் குறைந்து விடும்...' என, கூறத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., சசிதரூர் அறிக்கை:
சிறப்பு வாய்ந்த எழுத்தாளர், நுாலாசிரியர், மனித உரிமை ஆர்வலர் சலில் திரிபாதியின், 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்கை, டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதை செய்ததன் மூலம், அறிவை அந்த நிறுவனம் பயன்படுத்தவில்லை என்பது புலனாகிறது.



'மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கை உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டது தான், ஐ.சி.எப்., எனப்படும் பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை...' என, நெத்தியடியாக கூறத் துாண்டும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை:
மண்ணின் மக்களுக்காக உருவாக்கப்பட்ட, ஐ.சி.எப்., ரயில்வே பணிமனை தனியார் மயமாக்கும் போது, தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்படும் அபாயம் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X