சந்தா கோச்சார் கணவர் 'பித்தலாட்டம்' அம்பலம்!

Updated : டிச 11, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழல் வழக்கில், தீபக் கோச்சார், 'வீடியோ கான்' நிறுவனர் வேணுகோபால் துாத் ஆகியோர், தங்கள் வீட்டு வேலைக்காரர்கள், தோட்டக்காரர்களை இயக்குனர்களாக்கி, பினாமிகளாக பயன்படுத்தி முறைகேடு செய்திருப்பதை அமலாக்கத் துறை அம்பலப்படுத்தி உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு, 1,850 கோடி ரூபாய்
சந்தா கோச்சார், கணவர், பித்தலாட்டம், அம்பலம்!

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழல் வழக்கில், தீபக் கோச்சார், 'வீடியோ கான்' நிறுவனர் வேணுகோபால் துாத் ஆகியோர், தங்கள் வீட்டு வேலைக்காரர்கள், தோட்டக்காரர்களை இயக்குனர்களாக்கி, பினாமிகளாக பயன்படுத்தி முறைகேடு செய்திருப்பதை அமலாக்கத் துறை அம்பலப்படுத்தி உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு, 1,850 கோடி ரூபாய் முறைகேடாக கடன் வழங்கி ஆதாயம் பெற்றதாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் துாத் உள்ளிட்டோர் மீது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

.அதில் கூறப்பட்டுள்ள தாவது: சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாரின், என்.ஆர்.பி.எல்., நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் பெற்று தந்துள்ளார். இத்தொகை, நான்கு நிறுவனங்கள் செய்த முதலீடாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், முதலீடு தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.இந்நிறுவனங்களின் இயக்குனர்களாக, வேணுகோபால் துாத் வீட்டில் வேலை செய்யும், கேஷர்மால் நன்சுக்லால் காந்தி, வீடியோகான் தொழிற்சாலை தோட்டக்காரர் லஷ்மிகாந்த சுதாகர் கடோர் மற்றும் நிர்வாகி வசந்த் சேஷ்ராவ் ககடே ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும், 'தங்களுக்கு எதுவும் தெரியாது; ஆவணங்களில் கையெழுத்து மட்டும் போடுவோம்' என, தெரிவித்து உள்ளனர்.


அதுபோல, சந்தா கோச்சாரின் சகோதரர் மனைவி, நீலம் மகேஷ் அத்வானியையும், பல நிறுவனங்களின் இயக்குனராக நியமித்து, அவருக்கு பங்கு கள் ஒதுக்கப்பட்டதாக, போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். தீபக் கோச்சாரின் தந்தையை கவனித்து, ஓட்டுனர் வேலை பார்த்து வந்த சரத் சங்கர் மாத்ரேவை, ஒரு நிறுவனத்தின் இயக்குனராக காட்டி, பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.சாதாரண ஊதியம் பெறும் இவர்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களின் இயக்குனர்கள் என்பது, விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-202012:07:13 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சந்தா கோச்சார்க்கு சந்தா கட்டுறேன்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-டிச-202010:30:40 IST Report Abuse
vbs manian மோடி இருப்பதால் இந்த விஷயங்கள் வெளிச்சம். இதுவே அந்த பாழாய்போன காங்கிரஸ் இருந்தால் துட்டு வாங்கி கொண்டு எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்திருப்பார்கள்.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
10-டிச-202009:47:21 IST Report Abuse
Amirthalingam Shanmugam சட்டங்களில் ஓட்டையோ ஓட்டை பெரிய "டைநோசேர்" போகும் அளவுக்கு. நல்லவேளை அவர்கள் வீட்டு செல்லப்பிராணிகளை கையெழுத்து போடும் அளவுக்கு படிக்கவைக்கவில்லை ???.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-டிச-202011:48:50 IST Report Abuse
Dr. Suriyaகாங்கிரசு நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்தபோது .... அதை முன்னாடியே கட்சியில் உள்ள மிக பெரிய நில சுவான்தாருக்கெல்லாம் கமுக்கமாக சொன்னதால் ....பல காங்கிரஸ் நிலச்சுவான்தார்கள் தங்கள் வீட்டு செல்ல பிராணிகள் பேரிலும் நிலத்தை பிரித்து எழுதினார்கள் என்பது வரலாறு .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X