சத்தர்பூர்:மத்திய பிரதேசத்தில், நேற்று முன்தினம் கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், தண்ணீரில் மூழ்கி ஆறு பேர் பலியாயினர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்ட கிராமத்தின் சாலையோர கிணற்றில், அந்த வழியாக வந்த கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், காரில் இருந்த ஆறு பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
'உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர்' என, போலீசார் கூறினர்.இவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, அறிவித்துஉள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE