2021ல் எதிர்க்கட்சி; 2026ல் ஆளுங்கட்சி தமிழகத்தில் பா.ஜ., அதிரடி வியூகம்!

Added : டிச 09, 2020
Share
Advertisement
தமிழகத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதிரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, பா.ஜ., தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரில் துவங்கி, அனைத்து மூத்த மத்திய அமைச்சர்களும், தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என,

தமிழகத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதிரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, பா.ஜ., தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரில் துவங்கி, அனைத்து மூத்த மத்திய அமைச்சர்களும், தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இந்த தேர்தலில், பா.ஜ., கைகாட்டும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும்' என, தமிழக பா.ஜ., தலைமை கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நடத்தி வரும் வேல் யாத்திரை, மக்களின் கவனம் பெற்றுள்ளது என்ற தகவல், பா.ஜ., மேலிடத்தை உற்சாகமடையச் செய்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் துவங்கி, சட்டசபை தேர்தல் வரை, தமிழகத்தில் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள, பா.ஜ., தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தகவல்

பா.ஜ.,வை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சி யின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஏற்கனவே துவக்கி உள்ளார்.இவர், இம்மாதம், 31 மற்றும் ஜனவரி, 1ம் தேதிகளில், சென்னை வருகிறார். ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் மற்றும் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், அவர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரையும், நட்டா சந்திக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., தலைவர் வாசன், பா.ம.க., தலைவர் ராமதாஸ், தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து, தமிழகத்தில் அதிரடியான தேர்தல் பிரசாரத் திட்டம் ஒன்றை, பா.ஜ., தலைமை வகுத்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியில் துவங்கி, மூத்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி உட்பட, 25 மூத்த அமைச்சர்கள் அடங்கிய அதிரடி பிரசாரக் குழு ஒன்றையும், கட்சித் தலைமை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம், 5ம் தேதி துவங்கி, அடுத்த 90 நாட்களுக்கு, வாரம் ஒரு மத்திய அமைச்சர், தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி, சென்னை மற்றும் கோவையிலும்; மத்திய அமைச்சர் அமித் ஷா, திருச்சி - கோவையிலும்; ஸ்மிருதி இரானி, உதகையிலும்; ஜெய்சங்கர், தஞ்சாவூரிலும்; நிர்மலா சீதாராமன், திருவண்ணாமலையிலும்; ராஜ்நாத் சிங், வேலுாரிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

பிரசார தேதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 'தமிழகத்தில், 2021ல், பா.ஜ., சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாகவும்; 2026ல், ஆளும் கட்சியாகவும் இருக்க வேண்டும்' என, மாநில தலைவர்களிடம், தேசிய தலைவர் நட்டா உறுதிபட தெரிவித்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X