பொது செய்தி

இந்தியா

கொரோனாவை முந்திய ஐ.பி.எல்., 'கூகுள்' தேடு தளம் தகவல்

Added : டிச 09, 2020
Share
Advertisement
புதுடில்லி:'கூகுள்' தேடு தளத்தில், கொரோனா வைரசை விட, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி குறித்தே, இந்த ஆண்டு, அதிகம் தேடப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இணைய தேடு தளங்களில் முன்னிலை வகிக்கும், 'கூகுள்' தேடு தளத்தில், அதிகம் தேடப்பட்ட தகவல்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து, ஆண்டு இறுதியில், அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு,

புதுடில்லி:'கூகுள்' தேடு தளத்தில், கொரோனா வைரசை விட, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி குறித்தே, இந்த ஆண்டு, அதிகம் தேடப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணைய தேடு தளங்களில் முன்னிலை வகிக்கும், 'கூகுள்' தேடு தளத்தில், அதிகம் தேடப்பட்ட தகவல்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து, ஆண்டு இறுதியில், அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு, 'கூகுளில்' அதிகம் தேடப்பட்டவைகள் குறித்து, 'கூகுள் இந்தியா' நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் குறித்தே, இந்தாண்டு அதிகம் பேர், கூகுளில் தகவல் தேடியுள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் குறித்தும், அமெரிக்க தேர்தல் குறித்த தகவல்களையும், மக்கள் தேடி உள்ளனர்.நிர்பயா வழக்கு, ஊரடங்கு, இந்தியா - சீனா மோதல், ராமர் கோவில் ஆகியவை, இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட சம்பவங்களாக உள்ளன.

பிரபலங்கள் வரிசையில், புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள, ஜோ பைடன் மற்றும் 'ரிபப்ளிக் டிவி' ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், 'பாலிவுட்' நடிகர், அமிதாப் பச்சன் ஆகியோர், அதிகமுறை தேடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம், தற்கொலை செய்து உயிர்இழந்த, 'பாலிவுட்' நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான, தில் பேச்சாரா மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான, சூரரை போற்று ஆகிய திரைப்படங்கள், பொழுதுபோக்கு பிரிவில், அதிகம் தேடப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X