அமெரிக்க ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்த இந்தியா| Dinamalar

அமெரிக்க ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்த இந்தியா

Updated : டிச 10, 2020 | Added : டிச 09, 2020
Share
வாஷிங்டன்: இந்த ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும், ராணுவ தளவாடங்களும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை குறித்த விபரங்களை, அமெரிக்க ராணுவ துறையின் கீழ் செயல்படும், டி.எஸ்.சி.ஏ.,
அமெரிக்க ஆயுதங்கள், கொள்முதல், இந்தியா

வாஷிங்டன்: இந்த ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும், ராணுவ தளவாடங்களும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை குறித்த விபரங்களை, அமெரிக்க ராணுவ துறையின் கீழ் செயல்படும், டி.எஸ்.சி.ஏ., எனப்படும், ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

அதன் விபரம்:அமெரிக்காவில், கடந்த, 2017ல், 3.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. கடந்த, 2019ல், இந்த அளவு, 4.1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. எனினும், இந்த அண்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களின் மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


latest tamil news




கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, அதிக அளவு ஆயுதங்களை கொள்முதல் செய்த நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, 45.6 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்த இந்தியா, இந்த ஆண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது.

இதேபோல், சிங்கப்பூர், 9 ஆயிரத்து, 563 கோடி ரூபாய்க்கும்; தைவான், 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளன.எனினும், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈராக், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், இந்த ஆண்டு குறைந்த ஆயுதங்களையே கொள்முதல் செய்துள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X