சென்னை : ''மறைந்த ஜெயலலிதாவை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது'' என தி.மு.க. துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜா கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் ஆ.ராஜா அளித்த பேட்டி:'ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா சுதாகரன் இளவரசியுடன் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளார்.'சசிகலா உள்ளிட்ட பிற குற்றவாளிகளை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் குற்றம் நிரூபணமாகி உள்ளது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை என்றால் சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் வருமான வரிச் சட்டத்தின் கீழ் மட்டும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.அவர்கள் மூவரும் அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்தவர்கள் அல்ல; மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல. எனவே உச்ச நீதிமன்ற கண்டனங்கள் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் பொருந்தும். ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் நியமித்த அரசு வழக்கறிஞர்களால் தான் நடத்தப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தான் என் மீது 2ஜி வழக்கு நடந்தது. 'அவ்வழக்கு வதந்தி அடிப்படையில் ஜோடிக்கப்பட்டது' என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவ்வாறு ஆ.ராஜா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE