பெங்களூரு:சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பாக, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவிக்கும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா, 69, கன்னட மொழியை நன்கு கற்று, மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
சட்ட விரோதமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைக்கு வந்த புதிதில், மன வருத்தத்துடன், யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பினார். சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் சகஜமாக பழகினார்.
கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க ஆசிரியர்கள், சிறைக்கு வருவர். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்ற சசிகலா, இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், சிறை அறை ஒன்றில், சிறிய தொட்டிகளில் காளான் வளர்த்துள்ளார். தோட்டத்தில் தர்ப்பூசணி வளர்த்து, பணமும் சம்பாதித்துள்ளார்.இதே சிறையில் உள்ள, இவரது உறவினர் இளவரசியும் கூட, கன்னடம் நன்றாக கற்றுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE