பொது செய்தி

தமிழ்நாடு

5 புயல்கள் வருவதாக வதந்தி வலைதளங்களில் பரப்ப தடை

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:'அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாவதாக வரும் தகவல்கள் வதந்தி; அதை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்' என, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.வடகிழக்கு பருவ மழை துவங்கி ஒன்றரை மாதத்தில், தமிழகத்தில் இரண்டு புயல்கள் தாக்கி உள்ளன.'நிவர்' என்ற புயல் வட மாவட்டங்களிலும், 'புரெவி' என்ற புயல், டெல்டா மற்றும் வட மாவட்டங்களிலும், கன மழையை கொட்டியுள்ளது.அதனால், பல
 5 புயல்கள் வருவதாக வதந்தி வலைதளங்களில் பரப்ப தடை

சென்னை:'அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாவதாக வரும் தகவல்கள் வதந்தி; அதை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்' என, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்கு பருவ மழை துவங்கி ஒன்றரை மாதத்தில், தமிழகத்தில் இரண்டு புயல்கள் தாக்கி உள்ளன.'நிவர்' என்ற புயல் வட மாவட்டங்களிலும், 'புரெவி' என்ற புயல், டெல்டா மற்றும் வட மாவட்டங்களிலும், கன மழையை கொட்டியுள்ளது.அதனால், பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள் முதல், குடியிருப்பு பகுதிகள் வரை, வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

புயல், மழை முடிவுக்கு வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருகிறது.இந்நிலையில், இந்த மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாவதாக, சமூக வலைதளங்களில், தகவல்கள் பரவுகின்றன. இதை நம்ப வேண்டாம் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:புயல் மற்றும் மழை குறித்த தகவல்கள், உரிய நேரத்தில் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.மாறாக, புயல்களின் பெயர்களை குறிப்பிட்டு, 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாத தகவல்களை வலைதளங்களில் பரப்பவும் வேண்டாம். அதனால், பொதுமக்கள் குழப்பம் அடைய நேரிடும்.வடகிழக்கு பருவ மழையின் கால மாற்றங்களை, உரிய நேரத்தில் வானிலை மையம் அறிவிக்கும். அதை மட்டுமே கவனத்தில் கொள்ளவும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.-


'இன்று மிதமான மழை பெய்யும்!'

இன்றைய வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவ காற்று காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும்.அதிகபட்சம், 32; குறைந்த பட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.

24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:காயல்பட்டினம், 7; பெரியநாயக்கன்பாளையம், கோத்தகிரி, குன்னுார், 5; திருச்செந்துார், சோலையார், காரியாபட்டி, சோழிங்கநல்லுார், 4; கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம், தேக்கடி, சூலகிரி, ஆத்துார், ஹிந்துஸ்தான் பல்கலை, வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X