பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு தோட்ட இடுபொருட்கள் மானியத்திற்கு ஆதார் கட்டாயம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:'வீட்டு தோட்டத்திற்கான இடுபொருட்களை, மானிய விலையில் பெற ஆதார் அவசியம்' என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.தோட்டக்கலை துறை வாயிலாக, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'உங்கள் வீட்டு தோட்டம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் வழங்கப் படுகின்றன. விதைகள்,

சென்னை:'வீட்டு தோட்டத்திற்கான இடுபொருட்களை, மானிய விலையில் பெற ஆதார் அவசியம்' என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

தோட்டக்கலை துறை வாயிலாக, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'உங்கள் வீட்டு தோட்டம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் வழங்கப் படுகின்றன. விதைகள், தென்னை நார் கழிவு கட்டிகள், செடி வளர்ப்பு பைகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பின் விலை, 810 ரூபாய்; மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தற்போது, சென்னையில் வீட்டு திட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் விற்பனையை, தோட்ட கலை துறையினர் துவக்கி உள்ளனர்.மாதவரம் தோட்ட கலை பூங்கா,தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட இடங்களில் விற்பனை நடந்து வருகிறது. மானியத்துடன் இடுபொருட்களை பெறுவதற்கு ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் என, தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X