சென்னை:தமிழக அரசு பஸ்களில், பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு, நாளை மறுநாள் துவங்குகிறது.
பொங்கல் பண்டிகை, அடுத்தாண்டு, ஜன., 15ல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு முந்தைய நாளான, 14ம் தேதி, போகிப் பண்டிகையாகவும், பொங்கலுக்கு மறுநாள், காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. அதாவது, வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் பண்டிகை நாட்களாக உள்ள நிலையில், போகி பண்டிகைக்கு, இரண்டு நாட்களுக்கு முன், சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் பலர், ரயில் மற்றும் அரசு பஸ்களில் முன்பதிவு செய்கின்றனர்.
அரசு பஸ்களை பொறுத்தவரை, ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின், முன்பதிவு செய்வதற்கான, 'www.tnstc.in' என்ற இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, ஒரு மாதத்துக்கு முன் முன்பதிவு செய்யப்படுகிறது. எனவே, அடுத்த மாதம், 11ம் தேதி, வெளியூர்களுக்குச் செல்வோர், நாளை மறுநாள், 12ம் தேதி முன்பதிவு செய்யலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE