சென்னை:'செமஸ்டர் தேர்வுகளை, முறைகேடு இல்லாமல் நடத்தும் வகையில், ஒவ்வொரு கல்லுாரியிலும் தேர்வு கமிட்டி அமைக்க வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், டிசம்பர் மாத தேர்வை, 'ஆன்லைனில்' நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக உயர் கல்வித் துறையில், இதற்கான அனுமதி பெற்று, தேர்வு அட்டவணைகளை பல்கலைகள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளோ, குளறுபடிகளோ இல்லாமல், உரிய வகையில் நடத்துவதற்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இதன்படி, அனைத்து கல்லுாரிகளிலும்,உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் அடங்கிய தேர்வு கமிட்டி அமைக்க வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:அனைத்து கல்லுாரிகளும் தங்கள் மாணவர்களுக்கு, முன்கூட்டியே தகவல் அளித்து, தேர்வு விதிகளை தெரிவிக்க வேண்டும். கட்டண பாக்கி மற்றும் பல்வேறு காரணங்களை காட்டி, மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடாது. தேர்வுகளில் ஆள் மாறாட்டம் இருக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE