திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் முன்புறமுள்ள சக்கரதீர்த்தக் குளமும், அருகே உள்ள பெரிய மதகுக்குட்டம் ஊரணியும் மழைநீர் சேகரிப்பால் நிறைந்து வருகிறது.
2003ம் ஆண்டு திருப்புல்லாணி சக்கரத்தீர்த்தக்குளத்தில் மராமத்துபணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் பொன்னங்கழிக்கானல் நீரோடையின் மூலம் வழித்தடத்தில் சேகரமாகும் நீரை இரு குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டு கிணற்றில் விடப்படுகிறது. 2015ம் ஆண்டில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பொன்னங்கழிக்கானல் நீரோடை புதியதாக துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன.மழை காலங்களில் பொன்னங்கழிக்கானல் நீரோடையின் உபரி வெள்ள நீர் பம்பு செட் மூலம் உறிஞ்சப்பட்டு, 800 மீ., தொலைவிலான சிமென்ட் கால்வாய் மூலம் பெரிய மதகுக்குட்டம்ஊரணி முழுவதும் நிரம்பியுள்ளது.
குறிப்பிட்ட உயரத்திற்குபின்னர் தானாகவே, பெருமாள் கோயில் சக்கரதீர்த்த தெப்பக்குளத்திற்கு செல்லும் வகையில் வழித்தடம் அமைந்துள்ளது.திருப்புல்லாணி ஊராட்சித் தலைவர் கஜேந்திர மாலா கூறியதாவது:சேதுக்கரை கடலுக்கு வீணாக செல்லும் வெள்ள நீர், தடுப்பணைகளின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு, பெரிய குழாய்களில் பம்பு செட் மூலம் உறிஞ்சப்பட்டு பெரியகுட்டம், பெருமாள் கோயில் சக்கரத்தீர்த்தக்குளம் நிரம்பி வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில்குடிநீர் பற்றாக்குறை இல்லாமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திட வழிகிடைக்கிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE