அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு:முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Updated : டிச 10, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:'அரசு டாக்டர்கள், கொரோனா காலத்தில் ஆற்றிய, தன்னலமற்ற பணிகளை நினைவில் வைத்து, அவர்களது நீண்ட காலக் கோரிக்கையான, கால முறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை, அரசு உடனே வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில், தங்களின் உயிரை பணயம் வைத்து,தன்னலம் சிறிதுமின்றி,அரசு டாக்டர்கள் பணியாற்றி
 அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு:முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:'அரசு டாக்டர்கள், கொரோனா காலத்தில் ஆற்றிய, தன்னலமற்ற பணிகளை நினைவில் வைத்து, அவர்களது நீண்ட காலக் கோரிக்கையான, கால முறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை, அரசு உடனே வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில், தங்களின் உயிரை பணயம் வைத்து,தன்னலம் சிறிதுமின்றி,அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றாமல், அலட்சியம் செய்வது,

மிகுந்த கண்டனத்துக்கு உரியது.போராட்டம் நடத்திய அரசு டாக்டர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று, பணிக்கு திரும்பினர். அவர்களில், 118 பேரின் மாறுதல் உத்தரவை, எட்டு மாதங்களுக்கு பின், நீதிமன்றத்தின் தலையீட்டால், அரசு ரத்து செய்தது. ஆனால், அந்த டாக்டர்கள் மீது எடுத்த, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையை, இன்று வரை ரத்து செய்யவில்லை.

அரசு டாக்டர்கள் கோரிய ஊதிய உயர்வை அளிக்கவும் இல்லை; பேச்சு நடத்தவும் அழைக்க வில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்டு, ஒரு நபர் குழு நியமித்து, 'உடனே நடவடிக்கை எடுங்கள்' என, அ.தி.மு.க., அரசுக்கு அறிவுறுத்தியும் கூட, இதுவரை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, தமிழக அரசு டாக்டர்களுக்கு கிடைக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முதுநிலை மற்றும் உயர் சிறப்பு தகுதி மருத்துவக் கல்வியில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
10-டிச-202011:36:29 IST Report Abuse
Anand சே அரசுக்கு எதிரா என்ன சதி செய்தாலும், அது திருப்பி வந்து நமக்கே மூக்கு மேலே கும்மாங்குத்து குத்துது, அணைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடியுது, என்ன செய்யலாம். சரி இந்த அரசு டாக்டர்களை உசுப்பிவிடலாம்...... அதனோட ரியாக்ஷன் என்னவென்று பார்த்து பிறகு குளிர் காயலாம்...
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-டிச-202010:43:14 IST Report Abuse
கல்யாணராமன் சு. இன்னிக்கு முதல் அறிக்கையோ, இது? இன்னும் எத்தனை வரும். எப்பப்போ (எத்தனை மணிக்கு) வரும் என்று தளபதி சொன்னால், அந்த நேரத்தில் வேறு எந்த வேலையும் செய்யாமல், அறிக்கையை முதலில் படித்து விட்டுதான் மற்ற வேலைகளை செய்வோம்........ சொல்வீர்களா? சொல்வீர்களா?? ...
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
10-டிச-202007:36:40 IST Report Abuse
vadivelu எவனோ அரசின் திட்டத்தை லீக் செய்கிறான். அப்படித்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு, தமிழில் படித்தவர்களுக்கு 20% அரசு பணியில் ஒதுக்கீடு,. இப்போ இது.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-டிச-202012:31:29 IST Report Abuse
Dr. Suriyaவேற யாரு ஐந்தாம் படை தான் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X