பொது செய்தி

தமிழ்நாடு

பன்னாட்டு பாரதி விழாவில் நாளை பிரதமர் பங்கேற்பு

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:வானவில் பண்பாட்டு மையம் சார்பில், நாளை துவங்கும் பன்னாட்டு பாரதி விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதுகுறித்து, அதன் நிறுவனர் ரவி கூறியதாவது:பாரதியின் பிறந்த நாள், பாரதி அமைப்புகளால், நாளை கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், பாரதியாரின் தேசிய உணர்வுகளை பரப்பும் வகையில், பாரதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை:வானவில் பண்பாட்டு மையம் சார்பில், நாளை துவங்கும் பன்னாட்டு பாரதி விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதுகுறித்து, அதன் நிறுவனர் ரவி கூறியதாவது:பாரதியின் பிறந்த நாள், பாரதி அமைப்புகளால், நாளை கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், பாரதியாரின் தேசிய உணர்வுகளை பரப்பும் வகையில், பாரதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள, கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, நாளை காலை, 09:30 மணிக்கு, அமைச்சர்கள் பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கும், ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில்,சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து, பாரதியார் இல்லத்துக்கு, பாரதியின் உருவச் சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், 5:00 மணி வரை துவக்க விழா நிகழ்ச்சிகள், 'ஜூம்' செயலியின் வழியாக, காணொலியாக நடக்கின்றன. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, பாரதி அறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு, 'பாரதி விருது' வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார்.

அதேபோல், வரும், 16ம் தேதி நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.நாளை முதல், 20ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் காலை, 9:00 மணி முதல், இரவு, 8:00 வரை, பாரதியின் சிந்தனைகளை பரப்பும் வகையில், ஆடல், பாடல், சொற்பொழிவுகள், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், ஜூம் செயலி வழியாக நடக்க உள்ளன.

இதில், அமெரிக்கா, லண்டன், பாரிஸ், மஸ்கட், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமைப்புகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளன. ஜூம் செயலிக்கான கடவுச்சொல் குறித்த விபரங்களுக்கு, 98400 94000, 98400 49060 என்ற, மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, ரவி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X