பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் ரயில் விபத்து மீட்பு பயிற்சி

Added : டிச 09, 2020
Share
Advertisement
பழநி : பழநி ரயில் நிலையத்திற்கு நேற்று மதுரையிலிருந்து விபத்து மற்றும் மீட்பு ரயில் வந்தது. இதில் மருத்துவம், பொறியியல், மீட்பு பணி, ரயில்வே போலீசார் உட்பட ஊழியர்கள் பலர் வந்தனர். ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அதிக வெளிச்சம் ஒளிரும் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது. தடம் புரண்ட ரயிலை நிமர்த்த

பழநி : பழநி ரயில் நிலையத்திற்கு நேற்று மதுரையிலிருந்து விபத்து மற்றும் மீட்பு ரயில் வந்தது. இதில் மருத்துவம், பொறியியல், மீட்பு பணி, ரயில்வே போலீசார் உட்பட ஊழியர்கள் பலர் வந்தனர்.

ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அதிக வெளிச்சம் ஒளிரும் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது. தடம் புரண்ட ரயிலை நிமர்த்த பயன்படுத்தும் 1450 டன் எடை துாக்கும் கிரேனும் வந்திருந்தது. தீயணைப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்து நேரங்களில் அந்த இடத்தில் தகவல் தொடர்பை எற்படுத்தி, நேரடியாக அங்கு நடக்கும் காட்சிகளை ஒளிபரப்பும் அலைவரிசை கருவிகள் சோதனை செய்யப்பட்டது.] தண்டவாளம் மாற்றம் செய்ய ஏதுவாக அதற்கான உபகரணங்களுடன் சிவில் பணியாளர்கள் உட்பட ரயில்வே ஊழியர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X